Show all

இப்படியான சாதனை நிகழ்த்துவதில் மோடிக்கு நிகராக யாரும் இந்தியாவில் பிறந்திருக்கவில்லை! பெட்ரோல் விலையைத் தாண்டியது டீசல் விலை

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல் விலையை விட டீசல் விலை எப்போதும் குறைவாகவே இருக்கும். அதனாலேயே பலர் டீசல் கார் விலைக்கு வாங்குவர். ஏன் டீசல் புல்லட் பைக் கூட சந்தைக்கு வந்தது. ஏனென்றால் டீசலுக்கு அடுத்து, கூடுதல் செலவில் கிடைப்பதுதான் பெட்ரோல். நாட்டில் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை, மோடி அரசால் அனுமதி வழங்கப் பட்டு, அன்றாடம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. 

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து விலை மாறுபடுகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.

இப்படியான சாதனையை நிகழ்த்துவதில் மோடிக்கு நிகராக யாரும் இந்தியாவில் பிறந்திருக்க வில்லை இனி பிறக்கவும் போவதில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.