05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்;திர பட்நாவிஸ் மனைவி அம்ருதா சொகுசுக்கப்பலைக் கண்டதும் அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால் தம்படம் எடுத்த வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பையும் மீறி, கப்பலின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றார். கடல் அலைகள் உரசும் அடிப்பகுதியின் நுனியில் அமர்ந்தவாறு தம்படம் எடுக்க முற்பட்டார். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர், தம்படம் எடுப்பதிலே மும்முரமாக இருந்தார். பெண் அதிகாரி ஒருவர் தலையில் அடித்துக்கொண்டார். இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



