Show all

உள்ளடி வேலையைத் தொடங்கினார் சிதம்பரம்! தப்பித் தவறியும் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து விடக்கூடாது

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. எங்களுடைய இலக்கு பாஜகவை வீழ்த்தி, முற்போக்கு அரசை நடுவண்அரசில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உள்ளடி வேலையைத் தொடங்கி அதிர்ச்சி அளித்துள்ளார்.

முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அளித்த பேட்டியொன்றில்: அவரிடம் ராகுல் காந்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தலைமைஅமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில் கூறியதாவது:
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தலைமை அமைச்சர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைமை தலையிட்டு அவ்வாறு பேசவேண்டாம் என்று கூறிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட வேண்டும்.


 
அந்த இடத்தில் மாற்று அரசாக, முற்போக்கு அரசு அமர வேண்டும். தனிநபர்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் அரசாக, வரித் தீவிரவாதம் இல்லாத அரசாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக, உழவர்களின் நிலையை உயர்த்தும் அரசாக நடுவில் அமர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைமைஅமைச்சர் பதவி என்பது ஒரு பொருட்டு அல்ல. ராகுல் காந்தியும் தலைமை அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியும், எங்கள் கட்சியில் இருந்து தலைமை அமைச்சர் வர வேண்டும் என்றும் கூறவில்லை. எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், கூட்டணிக் கட்சிகள் என்னைப் தலைமைஅமைச்சர் வேட்பாளராகத் தேர்வு செய்தால், நான் பதவி ஏற்கத் தயார் என்று கூறி இருந்தார்.

மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கருத்;துப்பரப்புதலின் போது ராகுல் காந்தி பேசுகையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் நடுவே ஆட்சி அமைத்தால் நான் ஏன் தலைமைஅமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.