வங்காளத்தில் அரசு முன்னெடுத்த கொற்றவை விழாவில், தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்த கொற்றவை வணக்கப் பாடலுக்கு இரண்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் நடனமாடி கலக்கினார்கள். இந்த நடனக் காணொளி இணையத்தில் பலஇலட்சம் பார்வைகளை அள்ளிக் கொண்டு போகிறது. 05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வங்காள அரசியலில் கலக்கி வருகிறார்கள். மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜகான் ஆகியோர். இவர்கள் இருவருமே வங்காள நடிகைகள்! மிமிக்கு அகவை 30. ஜகானுக்கு அகவை 29. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகி விட்டார்கள். முதல் பாராளுமன்றக் கூட்டத்திலேயே இவர்கள் பெரிதும் பேசப்பட்டார்கள். இதற்கு காரணம், இவர்கள் அணிந்து கொண்டு போன நவீன உடைதான். அங்கு நின்று 2 பேரும் அடையாள அட்டையுடன் நிழற்படம் எடுத்து கொண்டு, அதை முகநூலிலும் பதிவிட, ஆதரவும், நையாண்டியும் பரிமாறப்பட்டன. நாங்க இளம் அகவைப் பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? ஒரு ஆண் பாராளுமன்ற உறுப்பினர் ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்ப்பது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா? என்று கேட்டிருந்தனர். மேற்கு வங்கத்தில் கொற்றவை விழா கொண்டாட்டம் மிகச்சிறப்பு, நம்ம ஊர் மாரியம்மன் தேர்த்திருவிழா போல. இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டம் ஒரு கிழமைக்கு அமர்க்களப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் வாங்காள அரசு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று கொற்றவை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் பாடல் ஒன்றை தயாரித்துள்ளது. இந்தப் பாடலுக்கு, மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜகான் ஆகிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நடனம் ஆடியுள்ளனர். அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் நடிகைகள் என்பதால், இவர்கள் நடனம் கொற்றவை விழாவின் கூட்டத்தை அள்ளியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,283.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



