Show all

பிக்பாஸ் நிகழ்ச்சி- குழம்பும் திறனாய்வாளர்கள்! இந்தக் கிழமை வெளியேறப் போவது யார்? தலைப்பை வெல்லப் போவது யார்?

பிக்பாஸ் வெளியேற்றப் படலத்தில், கருத்துக் கணிப்புகளில், இந்தக் கிழமையின் தொடக்தத்தில் இருந்தே செரின்தான் மிகமிகக் குறைந்த வாக்குகளில் இருக்கிறார். ஆனால் அண்மையில் கசியும் தகவலோ, சேரன் வெளியேற்றப் பட்டு விட்டதாகத் தெரிவிக்கிறது. பிக்பாஸ் தலைப்பை வெல்வார் கவின் என்பது போல, கவினுக்கோ மக்கள் எல்லையில்லாமல் வாக்களித்து வருகிறார்கள்.

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றப் பட்டியலில் இடம் பெறுவதும், அதே சமயம் கருத்துக் கணிப்புகளில் மிக மிக அதிகம் வாக்குகள் பெறுவதுமாக இருப்பவர் கவின்.

கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து கவினுக்கு, மக்கள் அதிக வாக்குகள் அளித்து வருவது- அவரைத்தான் விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் தலைப்பை வெல்வதற்கு தேர்ந்தெடுக்கும் என்று தெரிவிப்பதற்கா? அல்லது அவருக்குதான் பிக்பாஸ் தலைப்பை தரவேண்டும் என்று தெரிவிப்பதற்கா? என்று தெரியாமல், கருத்துக் கணிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் குழம்புகின்றன. 

ஏனென்றால்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் கொஞ்சம் கூட எதற்கும் இலாயக்கில்லாத நபராகவே காட்டப் படுகிறார். கமலும் அவரையே அடிக்கடி குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார். லாஸ்லியாவை சுற்றி சுற்றி வருவதைத் தவிர, கவின் எந்த உருபடியான வேலையும் செய்வதாகத் தெரியவில்லை. கவினின் நண்பர் வேறு பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அறை விட்டு விட்டுப் போனார். கவின் பிக்பாஸ் தலைப்பை வெல்வாரேயானால் விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிற ஊடகத்தினர் மற்றும் திறனாய்வாளர்களும் அதிர்ந்துதான் போவார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,283.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.