இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரக் காணொளியில் பொன் அனுமதி யாருக்கு? கனவு கலையும் வாய்ப்பு யாருக்கு? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பொன் அனுமதி முகனுக்கு கிடைத்திருக்கிறது; போட்டி முடியும் வரை அவருக்கு வெளியேற்றம் கிடையாது. இந்தக் கிழமை கனவு கலைவதற்கான வெளியேற்றத்தில் இருப்பவர் செரின் என்கிறது கருத்துக் கணிப்புகள். 04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில்: தமிழுக்கு வடக்கிலிருந்தே ஆபத்து இருப்பதால் தமிழக காவல் தெய்வங்கள் வடக்கை பார்த்தே நிற்கின்றன. என்ற செய்தி, கீழடி பெருமிதத்தை தமிழர்கள் ஏன் கொண்டாடி மகிழ வேண்டும் என்கிற செய்தி ஆகியவற்றை முன்னெடுத்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கினார் கமல். பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிகப்படியான நாட்களில் கவின்-லாஸ்லியா காதல் விவகாரத்தை முன்னிலைப்படுத்தியே ஒளிபரப்பு நகர்ந்து வந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. இன்னும் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் அறிவுரை தேவையாய் இருக்கின்ற நிலையில் கமல் அந்தப் பணியையும் இன்றும் தொடர வேண்டியிருந்தது. இந்தக் கிழமை முழுவதும் நடந்து முடிந்த பொன்அனுமதி, வேலைப்போட்டியில் எந்த போட்டியாளர் வெற்றி பெற்றாரோ அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார். அதே போன்று வேலைப்போட்டியில் பின்தங்கிய போட்டியாளரில் ஒருவர், பொதுமக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்ற நிலையில் நாளை வெளியேற்றப்படவுள்ளார் பொன்அனுமதி வாய்ப்பு முகனுக்கு கிடைத்து விட்டது. அதே போன்று சேரன், கவின், செரின் ஆகியோரில் யாரேனும் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், இன்றைய கருத்துக் கணிப்பில் செரின் வெளியேற்றப் படுவார் என்று தெரிவிக்கப் படுகிறது. இந்த வெற்றிப்பயணத்தை நோக்கிய ஒருவருக்கு பொன் அனுமதி கிடைக்கப் போகிறது. இன்னொருவருக்கு கனவு கலையப் போகிறது என்று விளம்பரக் காணொளியில், கமல் ஹாசன் கூறியதில்: -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,282.
நேரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் கமல் தனிஅறைக்கு வந்திருந்து, அந்த அறைக்கு முகனை அழைத்து பொன்அனுமதியை வழங்கிச் சென்றார். செரினுக்கு அந்த கனவு கலையும் வாய்ப்பு இருக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



