ஹிந்து நம்முடைய அடையாளமா? ஹிந்து என்று கூறிக்கொள்வது அறியாமை! நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிந்து கொண்டுள்ளார். 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய இறையியலின் அடிப்படையானவர்களான, பன்னிரண்டு ஆழ்வார்களோ, அறுபத்துமூன்று நாயன்மார்களோ ஹிந்து என்கின்ற குறிப்பு எதையும் கொடுத்துவிட வில்லை. ஆண்டு அனுபவித்த ஆங்கிலேயர்கள் ஹிந்து என்ற அடைமொழியை முன்மொழிந்தார்கள். அதுவும் அவர்களாக அல்ல. முகலாயர்கள் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ ஹிந்து என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை. நமது இந்தியா என்கிற அடையாளம் ஹிந்துவோடு தொடர்புடையது அன்று. தமிழர்- தம்மை உலகினரிடம் கடல் கடந்த வணிகத்தின் போது நாவலந்தேயம் என்று குறித்ததுதான் ந்தேயா இந்தியாவானது. நாம் நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வணிக, அரசியல் மற்றும் ஆன்மீக பிழையான தேர்வாகும். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடி என்றவுடன் பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி தமிழா நீ தலைவனாக வேண்டும் இதுவே என் வேண்டுகோள்' என்று குறிப்பிட்டுள்ளார் கமல்காசன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,155.
வழிமொழிந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.