டெல்லியில், பாஜகவின் இதழியலாளர் சந்திப்பு ஐந்தாண்டுகளில் முதல் முறையாக, இன்று நடந்தது. மோடியும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித்சா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார். 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில், பாஜகவின் இதழியலாளர் சந்திப்பு ஐந்தாண்டுகளில் முதல் முறையாக, இன்று நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் அமித்சாதான் பேசினார். அமித்சாவை தொடர்ந்து மோடியும் பேசினார். மோடி தேர்தல் குறித்த செய்திகளைப் பேசிவிட்டு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமித்சா மட்டுமே பதிலளித்தார். பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் குறித்தும், மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி அமைந்;தது. அனைத்து கேள்விகளுக்கும் அமித்சா பதில் அளித்து வந்தார். இந்த சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித்சா மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார். செய்தியாளர் ஒருவர் மோடியின் பெயரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். ஆனால் மோடி அதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மாறாக பாஜகவில் தலைவர்தான் எல்லாம். அதனால் கட்சி தலைவரிடம் கேளுங்கள். அவர் பதில் அளிப்பார் என்று மோடி கூறினார். அதன்பின் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அமித்சா மட்டுமே பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மோடிக்கு தலைமைஅமைச்சர் பதவி கிடையாது என்று கசிந்த தகவல் உண்மை என்று தெரிவிப்பது போலிருந்தது மோடியின் நடவடிக்கையும், சோகமும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,155.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.