Show all

தேசிய மலரை பாஜக சின்னமாக எப்படிக் கொடுத்தார்கள் என்று சீமான் இனி புலம்ப வேண்டாம்! தேசியமலர் தாமரை இல்லையாம்.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லவே இல்லையாம். மாநிலங்களவையில் நடுவண் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அதைக் கற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்று நீண்ட காலமாக ஒருசாரர் ஹிந்திக்கு ஆதரவாக ஒரு பொய்யை கருத்துப் பரப்புதல் செய்து வந்தார்கள். 

அண்மைக் காலமாகத்தான், இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. எட்டாவது அட்டவணை மொழிகளான தமிழ் உள்ளிட்ட இந்தியாவில் புழங்கும் 22 மொழிகள் அலுவல் மொழிகளே. ஹிந்தி பேசுகிற மாநிலத்தினர் கைகளிலேயே நடுவண் ஆட்சி தொடர்ந்து இருந்து வருவதால் அரசின் பணத்தில் ஹிந்தி வளர்ச்சிக்கு செலவிட்டு வருகிறார்கள் என்று அறிய முடிகிறது. 

இந்தியாவின் தேசிய மலர் என்பது பொதுவாக நாம் தாமரையைத் தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிக்கையும் இதுவரை வெளியிடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. 
பள்ளிகளில் பாடங்களில் கூட இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றும், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், இந்தியாவின் தேசிய பறவை மயில் என்றும், இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் என்றும் படித்திருப்போம். 

ஆனால் இப்போது தேசிய மலர் தொடர்பாக மாநிலங்களவையில் நடுவண் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். ‘தேசிய விலங்காக புலியையும், தேசிய பறவையாக மயிலையும் அங்கீகரித்து நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011ல் அரசாணை வெளியிட்டுள்ளது. தேசிய மலர் என எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை’ என்றார். 

இதன் மூலம் இதுவரை தேசிய மலர் தாமரை என பொதுவாக நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு விளக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி. தேசிய மலர் தாமரை போல, இந்தியாவின் தேசிய கட்சியாக பாஜக ஆகிவிடுமோ என்கிற அச்சம் சூழ்ந்திருக்கிற நேரத்தில். இந்தியாவின் தேசிய மலரை பாஜக சின்னமாக எப்படிக் கொடுத்தார்கள் என்று சீமான் இனி புலம்ப வேண்டாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,210.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.