பாஜகவில் 25 பேர்கள் சேர்ந்ததை தமிழிசை அவர்கள் பெருமையாகப் பதிவிட்டதால்: யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. என்பன போன்ற எதிர்க்கீச்சுகளால் தமிழிசை இன்று இணையத்தில் தலைப்பாகி வருகிறார். 26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழிசை பாஜகவில் சேர்ந்ததற்காக, அவரின் அப்பா குமரி அனந்தன் பேசாமலிருந்து அசிங்கப் படுத்தினார். தமிழிசை பாஜகவில் இணைந்தது முதல் அவர் பேசுகிற ஒவ்வொரு சொல்லுக்கும், அவர் செயல்படுகிற ஒவ்வொரு அசைவுக்கும் இணையத்தில், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக கிண்டலடிக்கப் பட்டு வருகிறார். ஒரு பேட்டியில் தமிழிசையின் கணவர் ஆறு ஹிந்தி ஆசிரியர்களால் கூட தமிழிசைக்கு ஹிந்தி பயிற்றுவிக்க முடியவில்லை (எப்படி தமிழிசையை பாஜகவில் மதிப்பார்கள் என்ற தொணியில்) பேட்டியளித்து அசிங்கப் படுத்தினார். அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்று கொண்டிருந்த தமிழிசை அதை இரத்து செய்து விட்டு கட்சி தலைவர் ஒருவரை சந்திக்கும் முயற்சியை முன்னெடுத்த கோபத்தில் தமிழிசையின் மகன், பாஜக ஒழிக என்று விமான நிலையத்தில் முழக்கமிட்டு அசிங்கப் படுத்தினார். யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. என்று தமிழிசைக்கு எதிர் கீச்சு வெளியிட்டு, இன்று இணையத்தில் அதைத் தலைப்பாக்கி, தமிழிசையை அசிங்கப் படுத்தியிருக்கிறார் ஓர் இணைய ஆர்வலர்! திரும்பவும், பாஜகவில் மிக தீவிரமான உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி பாஜக சார்பில் இந்த உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கையை முன்னின்று நடத்துகின்றனர். அந்த வகையில், நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது. மொத்தம் 25 பேர்தான் உறுப்பினர்கள். இவர்கள் எம்எஸ் மணியன் என்பவர் தலைமையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் முன்னிலையில் இணைந்துள்ளார்கள். 25 பேர் உறுப்பினர் சேர்க்கைக்கு காரணமான மணியனுடன் இணைந்து ஒரு புகைப்படமும் எடுத்து, அதை கீச்சிலும் போட்டுள்ளார் தமிழிசை. அதில், ‘நாமக்கல் மாவட்ட கருத்துப் பரப்புதல் பிரிவு தலைவர் சகோதரர் திரு. மணியன் அவர்கள் ஒரே நாளில் 25 உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்திருக்கிறார். சகோதரர் திரு. மணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்’ என்று பதிவிட்டுள்ளார். தமிழிசையின் இந்த பதிவிற்கு இணைய ஆர்வலர்கள் நையாண்டியாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள் ஒருவர்- “மணியன் அவருடைய மனைவி மகன்; மகள்; அப்பர் அம்மா மாமனார்; மாமியார்; மச்சினன்; கொழுந்தியார்; மைத்தினியார்; பெரியப்பர் பெரியம்மர் சித்தப்பர் சித்தி; தாத்தர் பாட்டி அண்ணன்; தம்பி மருமகன்; மருமகள்; பேரன்; பேத்தி; மச்சினன் மனைவி கொழுந்தியா கணவன்.. ஆக மொத்தம் 25 பேர்கள்” என்று பதிவிட்டு கிண்டலடித்துள்ளார். மற்றொருவர்- “இந்த 5 ரூபாயை ஐந்தாயிரமாக நினைத்துகொண்டு அண்ணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் (எங்க ஊரு கரகாட்டத்துல சொல்லுவாங்க)” என்று கீச்சு பதிவிட்டுள்ளார். ஒரு தேசிய அளவிலான கட்சிக்கு தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு ஊரில் ஒரு நாளில் 25 பேர் இணைந்துள்ளதை ஆச்சரியமாக கருதி, அதற்கு கீச்சும் பதிவிட்டு தமிழிசை தன்னை அசிங்கப் படுத்திக் கொள்கிறார் என்றால் அசிங்கப் படுவதில் கின்னஸ் சாதனை நிகழ்;த்தவே முயல்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,210.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.