சொந்தத் தொழில் தொடங்கி பணக்காரர் ஆகுங்கள் என்று அன்றாடம் ஆயிரம் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வரும். அது போலவே: மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அள்ளி விடும் ஆலோசனை. 26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சொந்தத் தொழில் தொடங்கி பணக்காரர் ஆகுங்கள் என்று அன்றாடம் ஆயிரம் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வரும். அதில் களம் இறங்கியவர்கள் பணக்காரர்கள் ஆக மாட்டார்கள். போராடி, போராடி அப்பப்பா என் சந்ததிக்கே இனி சொந்தத் தொழில் வேண்டாம் என்கிற பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள். இந்த நிலையில், படித்த பட்டதாரி இளைஞர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டால் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். படித்து முடித்துவிட்டு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள் லட்சக்கணக்கான பட்டதாரிகள். என்னதான் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதினாலும் வேலை என்பது கிடைப்பது சில பேருக்குத்தான். இதனால் தனியார் வேலைகளில் கிடைக்கும் குறைந்த சம்பளத்திற்கு இளைஞர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீன் வளர்ப்பு மூலம் சுய தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார். தேசிய மீன் வளர்ப்பு நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, எந்தெந்த மீன்களை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது தொடர்பான கையேட்டை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களே, சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால், மீன் வளர்ப்பு தொழிலில் முழுமையாக ஈடுபட்டு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். கடல் மீன் உணவுகளின் தேவை அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறையும். வேகமாக வளரக்கூடிய மீன்களான கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்கள் மற்றும் கடல்பாசிக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. அவற்றை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் மீன்கள் ஏற்றுமதியாகிறது. உலகளவில் அலங்கார மீன்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது’ இவ்வாறு கூறினார். அரசு ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தால் வேண்டுமானால் இது சாத்தியம். சொந்த நிலத்தில் உழவு செய்யாமல், மீன் வளர்த்தால் முப்பதாயிரம் சம்பாதிக்க அறுபதாயிரம் உழைப்பைப் போட வேண்டியிருக்கும். என்கின்றனர் முன்பே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் அனுபவத்தினர். மீன் வளர்ப்பது எப்படி? அதன்பின்னர் குளத்து நீரின் மேல்மட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டத்திலுள்ள உணவுகளை உண்ணும் கெண்டை ரகக் குஞ்சுகளை முறையே 40:20:40 என்ற விகித்தில் இருப்பு செய்ய வேண்டும். சாதாக்கெண்டை மற்றும் மிரிகால் இன மீன்குஞ்சுகளின் இருப்பினைக் குறைத்துக் கொண்டு போதுமான அளவு நன்னீர் இறால் குஞ்சுகளை இருப்பு செய்து வளர்க்கும் பட்சத்தில் மேலும் இலாபம் ஈட்டிட வழிவகை உள்ளது. மேல் உணவாக அரிசித் தவிடும், கடலைப் புண்ணாக்குத்தூள், மீன்தூள் முதலியவற்றை சரிசமமாகக் கலந்து 5விழுக்காடு மீன்தூளுடன் 10விழுக்;காடு மரவள்ளிக்கிழங்கு மாவு கலந்து ஆறவைத்து, பின்னர் கவளம் போல் உருண்டையாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அன்றாடம் மீனின் உத்தேச எடைக்கு 2-3 விழுக்காடு என அளிக்க வேண்டும். புல்கெண்டை மீனுக்கு வேலம்பாசி, ஹைடிரில்லா மற்றும் இளம்புற்களையும், தீவனப் புற்களான குதிலை மசால், கினியாப்புல், நேப்பியர்புல் என்பவைகளையும் சிறிது சிறிதாக வெட்டி மூங்கில் பரணில் வைத்து மிதக்கச்செய்து சிறப்பு உணவாக அளிக்க வேண்டும். இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் வேகமாக வளர, வளர்ப்புக் குளங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். வளர்ப்புகுளத்தின் நீர் மட்டம் எப்போதும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். இயற்கை உரம் ஒருமுறை, ரசாயன உரம் மறுமுறை என 15 நாள் இடைவெளியில் மாதம் இருமுறை உரமிடவேண்டும், உரமிட்டத்தின் பயன், நுண்ணுயிர் மிதவைகளின் பெருக்கத்தின் மூலம் தெரிகின்றதா என்பதை செச்சித் தட்டை பயன்படுத்தியும், நுண்ணுயிர் தாவர மிதவைகளை சேகரித்தும் அறிய வேண்டும். சில நேரங்களில் பாசி மற்றும் நுண்ணுயிர் தாவர மிதவைகளின் உற்பத்தி அதிகரிக்கும்போது குளத்து நீர் அடர்பச்சை நிறமாக மாறும். இதனைச் சரி செய்ய, மீன்களுக்கு உணவிடுவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டும். இல்லையெனில், நீர்வாழ் உயிரினங்கள் யாவும் இரவில் சுவாசிப்பதால் உயிர்வளி குறைவு ஏற்பட்டு மீன்கள் ஒட்டுமொத்தமாக இறக்க நேரிடும். நீரின் நிறம் பழைய நிலைக்குத் திரும்பியபின் வழக்கம்போல் உணவிடலாம்; உரமும் இடலாம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளத்திலுள்ள நாள்பட்ட பழைய நீரை 10விழுக்காடு அளவிற்கு வெளியேற்றி, புதுநீரைப்பாய்ச்ச வேண்டும். இரவில் நீரில் சுழல் சக்கரங்களைப் பயன்டுத்தும் வசதிகளைக் கொண்ட குளங்களில் இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக தேவையில்லை. தவிடு, புண்ணாக்குடன் மீன்தூளையோ அல்லது சோயாமாவையோ ஒரு பங்காகச் சேர்த்துப் பயன்படுத்தினால் மீன்களின் வளர்ச்சித்தறன் மேலும் அதிகரிக்கும். மாதந்தோறும் நடத்தும் சோதனை மீன்பிடிப்பின்போது, இயன்றவரை மீன்களை அதிகமாகக் கையாளாமல் அவற்றின் எடையை அறியவேண்டும். மீன்கள் ஆறு அல்லது ஏழாவது மாத இறுதியில் 750 முதல் 1250 கிராம் எடை வரை வளர்ந்து இருக்கும். அச்சமயம் நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்திட வேண்டும். மீன்களின் தேவை அதிகமாக இருந்தால் எல்லா மீன்களையும் பிடித்து விற்பனை செய்துவிடலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,210.
பொதுவாக ஒரு நீர் நிலையில் மீன் வளர்த்தலின் பொருட்டு மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன்பாக மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நீர் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளையும் சரிவர மேற்கொள்ள வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



