28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். கிபி 2006 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைபற்றியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 17 அல்லது 18, 2009 அன்று கொல்லப்பட்டார். மே 18ல் இலங்கை அரசு புலிகளுக்கெதிரான போர் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்தது. புதுக்குடியிருப்பில் இலங்கைப் படையினர் வேதி ஆயுதங்களால், குறிப்பாக நச்சு வாயுவால் தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிய வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேதி ஆயுதங்கள் இலங்கை படையினருக்கு இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாகும். என்று விக்கியில் பதிவிடப் பட்டுள்ளது. கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வடக்குப் பகுதி நோக்கிய தாக்குதலை இலங்கை அரசு தொடங்கியது. 2009 சனவரியில் புலிகளின் அரசியல் தலை நகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக கிபி 2009 மே 18ம் நாள் இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றுமாகத் தோற்கடித்து விட்டதாக அறிவித்தது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இதை நிகழ்த்திய கொடூரன் ராஜபக்ஷே, டெல்லியில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



