28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழர்கள், தமிழர் சார்பினத்தவர்கள், ஆரியர்கள், ஆரியர் சார்பினத்தவர்கள் பிணக்குகளோடும் ஏற்றதாழ்வுகளோடும் வாழ்ந்து வருகிறோம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள் சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ! பாரதியாரால், அவர்தம் சொந்தக் கருத்தாகப் பாடப்பட்ட கவிதையன்று இது. இந்தியாவின் நிலைமை இது. தமிழர் தொன்மம் சித்தம். ஆரியர் தொன்மம் வேதம். தமிழர் தொன்மத்தை கேள்வி கேட்டு அலசி அறிவுக்கு பொருந்தினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆரிய முன்னோர்களால் எழுதப் பட்டு விட்ட எழுத்துக் குவியல்கள் வேதம். கேள்வி கேட்காமல் ஒரு எழுத்து பிசகாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர் விழாக்கள் இயற்கை போற்றல்கள். பொங்கல் விழா, கார்த்திகைத் தீ விழா, ஆடி நீர்ப் பெருக்கு விழா, சித்திரைப் புத்தாண்டு விழா என்பன. ஆரியர் விழாக்களுக்கு எண்ணிக்கையில்லை. அவர்கள் நாடோடிகளாக வாழ்க்கையைத் தொடங்கியதால் தூங்கி எழுந்தாலே விழாதாம். சோமபானம் சுராபானத்தோடு அன்றாடம் கொண்டாட்டம் தாம். யாகம் வளர்த்து சுட்ட கறிவகை உணவுகள்தாம். இன்றைக்கு கொண்டாடப் படும் விநாயகர் சதுர்த்தி ஆரியர் விழா. விநாயகரை வழிபட வேண்டிய முறை, படைக்க வேண்டிய பட்சணங்கள், அவற்றின் செய்முறைகள், வழிபட வேண்டிய நேரம் போன்ற தகவல்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. விநாயகரின் உருவம் மனித உடலும், யானை முகமும் கொண்டதாக அமைந்திருக்கிறது. யானை முகத்தில் ஒரு தந்தம் உடைந்த நிலையில் காணப்படும். பொதுவாக யானைக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பதே அதன் தந்தங்கள்தான். தன் அழகு குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, தன் தந்தத்தை உடைத்து, ஆரியர் படித்து பயன்பெறும் வகையில் மகாபாரதம் என்னும் ஒப்பற்ற இதிகாசத்தை ஆரியர்க்கு வழங்கியவர் விநாயகர். அவரது தியாகத்தை உணர்த்தும் நிகழ்ச்சியே இது. ஆரியர்களும் மற்றவர்களின் பொருட்டு தியாகம் செய்யவேண்டும் என்பதையே விநாயகரின் இந்த உடைந்த தந்தம் ஆரியர்க்கு உணர்த்துகிறது. பருமனான உடல்வாகு கொண்டவர் விநாயகர். ஆனால், அவரது வாகனமான மூஞ்சூறு உருவத்தில் மிகச்சிறியது. இதிலும் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. மூஞ்சூறு என்பது அறியாமையின் அடையாளம். ஆரியர்களின் அறியாமையை அடக்கி ஆள்பவர் விநாயகர் என்பதை மூஞ்சூறு வாகனம் ஆரியாகளுக்கு உணர்த்துகிறது. இதில் மற்றொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. தூய்மையான பக்தியுடன் தம்மை வழிபடுபவர்களின் மனங்களில் தம்மை எளிதாக்கிக்கொண்டு எழுந்தருள்கிறார் என்னும் பேருண்மையையும் மூஞ்சூறு வாகனம் ஆரியர்க்கு உணர்த்துகிறது. விநாயகரின் காதுகள் முறம் போன்று பெரிதாக இருக்கும். நல்ல விசயங்களைக் கேட்கவேண்டும் என்பதை ஆரியர்களுக்கு உணர்த்தவே காதுகள் பெரிதாக அமைந்துள்ளன. தும்பிக்கை, விநாயகரின் வாயை மறைத்துள்ளது. அது ஆரியர் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. விநாயகர் ஒரு கையில் மோதகம் வைத்துள்ளார். மோதகத்துக்குள் இருப்பது இனிப்பான பூரணம். தம்மை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அருள்வார் என்பதை உணர்த்தவே விநாயகரின் கரத்தில் மோதகம் இருக்கிறது. இந்த மோதகம் பிரபஞ்சத்தைக் குறிப்பிடுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் ஆரியர் காணும் அனைத்தும் இனிப்பானவையே. ஆரியரும் மற்றவர்களுடன் இனிமையாகப் பேசினால், பிள்ளையார் ஆரியரை தம் கரத்தில் ஏந்திக் காப்பாற்றுவார் என்பதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். இவை அனைத்தையும்விட விநாயகப் பெருமான் அணுகுவதற்கு எளிமையான கடவுள். ஆனாலும், அருள் திறத்தில் எல்லை இல்லாதவர். மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல், பிள்ளையாரை மட்டும் சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும்கூட வைத்து வழிபடுகிறார்கள். அது சரியா? அவரை ஆரியர்கள் தங்கள் தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதன் தாத்பர்யம் என்ன என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் அளித்த அருளுரை இது: பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் அருள் செய்யும் எளிய சுவாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், வெல்லத்திலும்கூட பிள்ளையாரைப் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. சொல்லப்போனால் வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு எளிமையானவர் பிள்ளையார். அவரை வழிபட ஆரியர் நிறைய சாஸ்திரம் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்குக்கூட அவர் கூப்பிட்ட உடனே வந்துவிடுவார். மற்ற சுவாமிகளை ஆரியர் தரிசனம் செய்ய வேண்டும் என்றால், நேரம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்சனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போகவேண்டி இருக்கிறது. போனாலும் நேராக சுவாமியிடம் போய்விடமுடியாது. பிராகாரத்தைச் சுற்றிக்கொண்டு போகவேண்டும். அப்படியும் சுவாமிக்கு ரொம்பவும் பக்கத்தில் போய்விடமுடியாது. கொஞ்சம் தள்ளித்தான் நிற்கவேண்டும். ஆனால், பிள்ளையார் அப்படி இல்லை. சாலையோரத்திலும் மரத்தடியிலும்கூட அவர் அமர்ந்துகொண்டிருக்கிறார். பிள்ளையாரை அருகில் சென்று கும்பிடலாம். ஆபீஸ், கடை அல்லது பள்ளிக்கூடம் போகும் வழியிலும்கூட அவரைத் தலைநிமிர்ந்து பார்த்து வணங்கலாம். அதிலேயே ஆரியருக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைத்துவிடும். அவர் எளிமையான குழந்தை வடிவமான சுவாமி. பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, இரண்டு கைகளை குறுக்காக மறித்து இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுவதுபோன்று தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் வழிபாட்டில் அடங்கிஇருக்கின்றன. யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஆரியர் நாடிகளில் ஏற்படும் சலனங்களால், எப்படி மனதையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லப்பட்டுள்ளது. ஆரியர்களுடைய உடம்பைப் பல தினுசுகளாக வளைத்துச் செய்யும் அப்பியாசங்களால், சுவாசத்தின் போக்கில் உண்டாக்கிக் கொள்ளும் மாறுதல்களால், ஆரியர்களுடைய உள்ளம் உயர்வதற்கான வழி அந்த யோக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தலையில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது போன்றவற்றால் ஆரியர்களுடைய நாடிகளின் சலனம் மாறும். மனதில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையுடன் செய்தால் அதற்கு நிச்சயமாகப் பலன் தரும். விரதங்களில்கூட விநாயகர் சதுர்த்தி விரதம்தான் புராதனமான விரதம். அளவற்ற நன்மைகளை அளிக்கும் விரதம். முருகக் கடவுள் ஒருமுறை சிவபெருமானிடம், தந்தையே! விரதங்களில் எல்லாம் சிறந்தது எது? என்று கேட்டார். உடனே சிவபெருமான், சந்தேகமே இல்லாமல் கூறுகின்றேன். விநாயகர் சதுர்த்தி விரதம்தான் தலைசிறந்த விரதம் என்று பதிலளித்தார். இதைக்கேட்ட முருகன் சற்றே குழம்பிப் போனார். காரணம் விநாயகரைப் பெற்றவரே சிவபெருமான்தானே? அப்படி இருக்க விநாயகரைக் குறித்த விரதம் எப்படிச் சிறப்புடையதாகும்? முருகனின் இந்தக் குழப்பத்தைத் தெளிவிக்கும் விதமாகச் சிவபெருமான் இவ்வாறு கூறினார். முருகா! மூல முழுமுதற் பொருள் விநாயகர்தான். அவர்தான் மும்மூர்த்திகளான எங்களையும், அகில உலகங்களையும் தோற்றுவித்தவர். அவர் இதற்கு முன்பும் பலமுறை பல காரண காரியங்களுக்காக அவதாரம் செய்துள்ளார். அப்படி ஒருகாரணத்தை முன்னிட்டே அவர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார். எனவே, அவரே சகலமும். என்றாராம். தமிழர்களுக்கு இத்தனைக் கதைகளையெல்லாம் கேட்கும் போது நூறாயிரம் கேள்விகள் வரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



