Show all

ஜோதிமணி கோபம்! ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் மோடி நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது ஏன்?

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மிருகத்தனமாக உயர்ந்து வருகிறது. மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் காட்டுமிராண்டித் தனமாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெனரல் டயர் ஜாலியன்வாலாபாக்கில் எதிரில் கண்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது போல கன்னாபின்னாவென்று ஏறிக் கொண்டிருக்கிறது விலை. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள் பாஜக ஆளும் அரசு.

மக்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கே போய் முட்டிக் கொள்வது என்றும் புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தகித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை தகித்துக் கொண்டிருந்தாலும் அதை பாஜகவினர் முட்டுக்கொடுக்கத் தவறவில்லை. தொடர்ந்து நியாயப்படுத்தியே பேசி வருகிறார்கள். அதை விட தப்புத் தப்பாக கிராப் போட்டுக் காட்டி மக்களிடம் மேலும் மேலும் வெறுப்புகளை வாரிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மோடி மீது பொங்கும் அதீத கோபம் நியாயமானதே. பெட்ரோல் ,டீசல் விலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் மோடி நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பிரமுகர் ஜோதிமணி போட்டுள்ள கீச்சில் மோடியை சாடியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.