16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாம்புக்கறி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்பதைத் தெரிவிக்கும் சித்தர் பாடல் ஒன்று பாம்புக்கறி சாப்பிடும் சீனர்களுக்கான எச்சரிக்கைப் பாடலாக அமைந்துள்ளது. ஆனால் அது சீனர்களுக்கு தெரியாதுதானே. சீனார்களுக்கு அந்தச் செய்தி முன்னமேயே சென்று சேர்ந்திருக்குமேயானால் பாம்புகறி மறுக்கும் இயக்கம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு- இன்றைய கொரோனா நுண்ணுயிரியிலிருந்து தற்காத்து கொண்டிருந்திருக்கலாம்தான். இந்த சித்தர் பாடலை அறிந்திருக்கிறவர்கள் கூட சீனா பாதித்தபிறகு இன்றுதானே இந்தப் பாடலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள் என்ன பயன் இருக்கமுடியும். இது தமிழர் தகவல். ஆரியர் கதைப்புளுகு:- ஹிந்து புராணக்கதையில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள். சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயிற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். அந்த பாம்பு கக்கிய விசம்தான் கொரோனா வைரஸாம். அந்த வைரசை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது. இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம். அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து தெய்வ அந்தஸ்துக் கொடுத்து பாம்பை உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம். சீனாவில் பாம்பு கறியை சமைக்காமல் சாப்பிட்டவரிடம் இருந்துதான் இந்த வைரசே பரவியது என்று சொல்கின்றனர். இதை எப்போது மருந்து கண்டுபிடித்து மீளப்போகிறார்களோ தெரியவில்லை. இன்னும் எந்தெந்த நாட்டு மக்கள் பாதிக்கப்போகிறார்களோ பார்க்கலாம். இப்படி தங்கள் புராணப் புளுகை அவிழ்த்து விட்டு, சீனா படும் துயர அழுகையில் கூட தங்கள் பொருமிதத்தை பறைசாற்றி பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றனர் ஹிந்துத்துவா ஆர்வலர்கள்.
‘சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்’
என்பதாகும் அந்தப்பாடல்.
இதன் பொருள்:- பாம்புக்கறி சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளம் அகவையினரைக்க்கூட தாக்கி நுரையீரல் பாதிக்கப்பட்டு, பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை பாதிக்கப்பட்டு இறப்பார்கள் என்று கூறியிருக்கிறார் சித்தர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



