Show all

எல்லையை மூடியது, கொரோனோ நுண்ணுயிரி! ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே

கொரோனோ நுண்ணுயிரி பரவுவதை தடுக்கும் வகையில், சீனா- ரஷ்யாவிற்கு இடைப்பட்ட  எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய தலைமைஅமைச்சர் மிக்கைல் மிஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.  

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரஷ்யாவில் தற்போது வரை யாருக்கும் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு இல்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனோ நுண்ணுயிரி பரவுவதை தடுக்கும் வகையில், சீனா- ரஷ்யாவிற்கு இடைப்பட்ட  எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய தலைமைஅமைச்சர் மிக்கைல் மிஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.  சீன நாட்டவர்களுக்கு வழங்கி வந்த மின்னணு நுழைவு அனுமதிகளையும் நிறுத்த உள்ளதாக  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதேபோல், ரஷ்ய நாட்டவர்கள் சீனா செல்வதை தவிர்க்குமாறும், சீனாவில் இருக்கும் ரஷ்யர்கள், தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா நுண்;ணுயிரி நோய், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த நுண்ணுயிரி பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.