Show all

மாநிலக்கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்! சூதாட்டக்காரர்களிடமிருந்து கசிந்த தகவல்

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை பாஜகவுக்கு அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்காது 

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட இந்திய நகரங்களில் சட்டா பஜார் எனப்படும் சூதாட்டச் சந்தைகள் மிகவும் பிரபலம். அவற்றில் சூதாட்டம் நடத்துவோர் தற்போது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்று பந்தயம் கட்டி விளையாடுகின்றனர். அவர்களின் தற்போதைய கணிப்புப்படி பாஜக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது. அக்கட்சிக்கு சுமார் 185 முதல் 220 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 140 முதல் 160 இடங்களும், மாநிலக் கட்சிகளுக்கு 230 முதல் 250 இடங்கள் வரை கிடைக்கும் என்பது அவர்கள் கணிப்பு. 

இந்த வகையில் மாநிலக் கட்சிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. இந்த மாநிலக் கட்சிகளில் காங்கிரசைப் பிடிக்காத கட்சிகளை விட மோடியைப் பிடிக்கவே பிடிக்காத கட்சிகள் அதிகம்.

எனவே காங்கிரஸ் மாநிலக்கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்கும் என்ற தகவல் சூதாடிகளிடம் இருந்த கசிந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.