Show all

சென்னைத்தமிழன் நடிகர் மணி! ஹிந்தி, பெங்காலி, கன்னட மொழிகளில் விருதுகளைக் குவித்து தற்போது தமிழுக்கு வருகிறார்

இந்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். மற்ற மற்ற மாநிலங்களில் விருதுகளைக் குவித்து விட்டு தமிழுக்கு வரும் சென்னைத்தமிழன் நடிகர் மணி. 

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் நடிகர் மணி. இவர் கன்னடத்தில் வெளியான தேசி படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
பெங்காலி ஹிந்தி உட்பட பலமொழிகளில் இவர் நடித்து வருகிறார்.

வுpரைவில் ஏஆர்கே இராஜராஜா இயக்கும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் நடிகர் மணி. இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, 'நான் எத்தனை மாநில மற்றும் நடுவண் அரசு விருதுகளைப் பெற்றபோதும், என்தமிழ்மொழியில் நடித்து தமிழக மக்களின்நெஞ்சங்களில் வாழ்வதே எனக்கு மிகப்பெரிய விருதாக நான் கொண்டாடுவேன். அது விரைவில்நடக்க இருக்கிறது என்கிறார்.

இவர் சென்னை பையனாம். அப்பா இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியாக இருந்ததால் பல மாநிலங்களில் வாழ்ந்ததாகவும், பெங்களூருவில் வாழும் போது கன்னடப் படத்தில் அறிமுகமானதாகவும், மேற்கு வங்கத்தில்அப்பா பணியாற்றும் போது பெங்காலி படங்களில் நடித்ததாகவும் தற்போது தமிழுக்கு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

எந்தெந்த மாநிலத்தில் இருந்தெல்லாம் தமிழே கத்துக்காம வேலைக்கு வந்து, நேற்று மதுரையில் வரலாறு காணாத தொடர் வண்டி விபத்திற்கு காரணமாகியிருந்திருப்பார்கள். 

எந்தெந்த மாநிலத்தில் இருந்தெல்லாம் தமிழுக்கு வரும் நடிகர்கள், தமிழக முதல்வர் ஆக மாட்டோமா என்று ஏங்குகிறார்கள். வாப்பா மணி தாராளமா வா! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.