Show all

பரபரப்பு கிளப்பிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு! இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டிலாம்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது என்று ஒரு (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்பு தெரிவிப்பது இதுவே முதல்முறை. 

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பு இராக் சிரியாவில் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், உட்பட 18 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் அந்த ஐஎஸ்ஐஎஸ் பெயர் சுருக்கத்திற்கு உரிய அமைப்பு காலூன்றி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் இசுலாமிய ஆட்சியை எற்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கமாம்.  

கடந்த உயிர்ப்பு நாளன்று இலங்கையில் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்புக்கு இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று தெற்காசிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் வெள்ளியன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். சோபியானில் நடைபெற்ற அந்தத் துப்பாக்கிச் சண்டையில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த இஷ்பக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் ஐஎஸ்எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான அமக் செய்தி முகமை -யில் இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதற்கு ஹிண்ட் விலயாஹ் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.