05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி அம்பிகாவை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் சாளூர் மடத்தின் இளையமடாதிபதி மகாதேவசாமி கூறியதால் பிரசாதத்தில் நஞ்சு கலந்ததாக கூறினார். இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்பிகா, அவரது கணவர் மற்றும் மகாதேவசாமி உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



