06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தங்கள் முன்னோர்கள் செய்து வந்த தொழிலின் அடிப்படையில் தமிழர்கள் வழங்கி கௌரவித்த குழுக்கள் பெயரை, ஆரியர்கள் ஏற்றதாழ்வு கற்பிக்க பயன் படுத்திக் கொண்டனர். இன்றைக்கு தொழிற்சங்கங்கள் இருப்பதைப் போல அன்றைக்குப் போராடுவதற்கும், சாதிப்பதற்குமான அமைப்பாக இருந்த சாதியை, ஆரியர்கள் ஜாதி என்று பிறப்பு அடிப்படையாக்கி, தொழில் மாறினாலும் ஜாதி மாறாமல் பார்த்துக் கொண்டார்கள். பழந்தமிழகத்தில் தொழில் மாறுகிறவர்களின் சாதி (தொழிற்சங்கம்;) தானாக மாறி விடும். வெள்ளையர்கள் வரவுக்குப் பின்னால் ஆரியர் கட்டமைத்த சாதிய ஏற்றதாழ்வு பகுத்து ஆராயப்பட்டது. திராவிட இயக்கத்தினர் அதை போற்றிக் கொண்டனர். சாதி: சமூக நீதிக்காக பட்டியலிடப் பட்டது. இடஒதுக்கீடு பெறுவதற்கு சாதிச்சான்றிதழ் தேவையே. திருமணத்திற்கும் சாதியை, தனிமனித உரிமை பாதிக்காமல் முன்னெடுப்பது சட்டசிக்கல் இல்லை. தனிமனித உரிமையைத் தாண்டி சாதியை முன்னெடுக்கும் போதும், உணர்ச்சி வேகத்தில் ஆணவக் கொலைகளில் ஈடுபடும் போதும், சட்டம் சாதியப் பாகுபாட்டை ஏற்றுக் கொள்ளாது. ஆரியர்காலத்தில் பாதிக்கப் பட்ட சமூகம், இன்றைக்கு வளர்ச்சி அடைவதற்காக இடஒதுக்கீடு வழங்குவது மட்டுமே சட்டத்தின் நோக்கம். இதையொட்டி தமிழர் ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வரும் சீமானின் பேச்சுகள் குறித்த சரியான புரிதல் இன்மையின் அடிப்படையில், அவ்வப்போது சிலர் தங்கள் சமுதாய மக்களை அவதூறாகவும், இழிவாகவும் பேசிவிட்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கண்டிக்கத் தொடங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் சீமானும் உணர்ச்சி வயப்பட்டு தவறான புரிதலுக்கு காரணமாகி விடுகிறார். அந்த வகையாக மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை கோகுலம் மக்கள் கட்சியின் தலைவர் சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆலப்பாக்கம் முதன்மைச்சலையில் ஊர்வலமாக வந்தனர். மாநகராட்சி பூங்கா அருகே வந்தபோது, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரவாயல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சீமானுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் காரணமாக சீமான் வீடு உள்ள பகுதியில் அவரது கட்சியினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சீமான்: சாதி குறித்த அடிப்படைகளை தமிழர்களுக்கு விளக்குவதற்கு உணர்ச்சி வயப்படாமல், மென்மையான போக்கில், நியாயங்களை முன்வைக்க வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



