05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதான விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற வளாகத்தில், போராட்டம் நடத்த உள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன் கர்நாடகாவிலுள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது. ஆனால் மாநிலங்கள் அவை உறுப்பினராக கர்நாடகாவில் இருந்து தெர்ந்தெடுக்கப்பட்டவர். நிர்மலா சீதாராமன் இந்திய மக்களுக்குப் பொதுவான நடுவண் அமைச்சர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர், அதுவும் கூட காவிரி பாயும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா சீதாராமன். ஆனாலும் தான் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநிலத்திற்கு நன்றியுள்ளவராக கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். மகிழ்ச்சி! தமிழிசை உள்ளிட்ட தமிழக பாஜகவினர் தமிழகத்திற்கு தங்களுடைய நன்றியுணர்வை எப்படிக் காட்டப் போகிறார்கள்? தங்களுக்கும் சூடு சொரணை இருப்பதைக் காட்டுவார்களா? இந்தியாவில் பாஜகவில் இருக்கிற அனைத்து மாநில கட்சிக்காரர்களும், தங்கள் தங்கள் மாநிலத்திற்கு நன்றி உணர்வோடு இருக்கும் போது, நாம் இப்படி அடிமையாக பாஜகவிற்கு சோரம் போகிறோமே என்று வெட்கப் படுவார்களா? அதற்குப் பதிலடியாக போராட்டம் நடத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம், உடனடியாக, நிர்மலா சீதாராமனுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவிக்குமா? நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு எதிராக அதிரடி பதிலடியாக தமிழிசை டெல்லியில் போய்ப் போராட்டம் நடத்துவாரா? இதன் மூலம், தமிழக பாஜக தம்மை பாஜகவிற்கு அர்பணித்த தமிழகத்திற்கு நன்றியுணர்வோடு உள்ளது என்பதை நிரூபிக்குமா? என்று அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



