Show all

இந்தியா எங்கே? தங்கம் அதிகம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில்

உலகின் எந்தவொரு நாடும், தாங்கள் மக்களின் உழைப்பு ஆதாயமான தங்கத்தின் இருப்பு அளவிற்கே காகித நாணயங்களை அச்சிட்டு வெளியிட முடியும். ஆனால் உலகின் பல நாடுகள் குறைந்த தங்க இருப்புக்கு அதிக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிடுகிற நடைமுறையை முன்னெடுத்து வருகின்றன. 

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: எந்தவொரு நாட்டிலும் புழக்கத்தில் இருக்கும் காகித நாணயங்கள், அந்த நாட்டின் அரசு இருப்பு வைத்துள்ள தங்கத்தின் மாற்று ஆகும். இருப்பு வைத்துள்ள தங்கம், அந்த நாட்டு மக்களின் உழைப்பு ஆதாயம் ஆகும். அந்த வகையில் நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது.

இதனால் உலகின் எந்தவொரு நாடும், தாங்கள் மக்களின் உழைப்பு ஆதாயமான தங்கத்தின் இருப்பு அளவிற்கே காகித நாணயங்களை அச்சிட்டு வெளியிட முடியும். ஆனால் உலகின் பல நாடுகள் குறைந்த தங்க இருப்புக்கு அதிக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிடுகிற நடைமுறையை முன்னெடுத்து வருகின்றன. 

ஒவவொரு நாட்டின் தங்க இருப்பு அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிற காரணத்தால் அதிக தங்கச் சேமிப்பு கொண்ட நாட்டு நாணயத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கிறது.

இந்த வகையில் உலகத்திலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 10,133 மெட்ரிக்டன் அளவுக்கான தங்கத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது. ஏறத்தாழ 34 கோடி மக்கள் தொகையுள்ள அமெரிக்காவின் தனிமனித உழைப்புஆதாய அரசின்இருப்பு 30கிராம் தங்கம் ஆகும்

அடுத்ததாக 3,358 மெட்ரிக்டன் தங்க இருப்புடன் ஜெர்மனி 2வது இடத்தில் உள்ளது. ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளில் ஜெர்மனியில் தங்கம் கையிருப்பு மூன்று விழுக்காடு குறைந்துள்ளது. ஏறத்தாழ 8 கோடி மக்கள் தொகையுள்ள ஜெர்மனியின் தனிமனித உழைப்புஆதாய அரசின்இருப்பு 41கிராம் தங்கம் ஆகும்

எந்தவித மாற்றமும் இன்றி 2,451 மெட்ரிக்டன் தங்க கையிருப்புடன் இத்தாலி 3வது இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டிடம் 1,040டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது.

8வது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 845 மெட்ரிக்டன் தங்கம் உள்ளது. ஏறத்தாழ 13 கோடி மக்கள் தொகையுள்ள ஜப்பானின் தனிமனித உழைப்புஆதாய அரசின்இருப்பு 6கிராம் தங்கம் ஆகும்

இந்தியா 757 மெட்ரிக்டன்னுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. ஏறத்தாழ 140 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவின் தனிமனித உழைப்புஆதாய அரசின்இருப்பு 0.54கிராம் தங்கம் ஆகும்

தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக்டன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,437.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.