Show all

பட்டாசு கொளுத்த சிறுவர் சிறுமியருக்குத் தடையில்லையாமே!

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மத்தாப்பு, புசுவாணத்துக்கு நேரக்கட்டுப்பாடு இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அது பட்டாசுதான். ஆனால் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக, காலை 4 முதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க அறங்கூற்றுமன்றம் நிர்ணயம் செய்தது. 

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீயணைப்பு துறை காவல்துறைத் தலைவர் மகேந்திரன் கூறுகையில் பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பின்னர் சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. புசுவாணம் மத்தாப்பு உள்ளிட்டவற்றை வெடிக்க தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அது போல் ராக்கெட்டுகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றார். இதனால் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சிக்கு தடையில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,961.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.