Show all

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு.சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சன் தொலைக்காட்சியின் 742கோடி சொத்து முடக்கத்திற்கானஅறிவிப்பு அனுப்பியிருந்தது.இதனை எதிர்த்து சன்தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரந்தது.இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதி மன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.

சன்தொலைக்காட்சி அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைகேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் 13/07/2015விசாரணைக்கு உத்தரவிட்டு அன்றுவரை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதான அமலாக்கப்பிரிவின் 742கோடி சொத்து முடக்க முயற்சிக்கு தடை விதித்தது.

சன்தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறையின் 742கோடி சொத்து முடக்க முயற்சிக்கு உச்சநீதி மன்றத்தின் மூன்று நாள் தடை கிடைத்திருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.