Show all

தமிழ்நாட்டின் முதல் ஒன்பது பணக்காரர்கள்!

உலகப் பணக்காரர்கள், இந்தியப் பணக்காரர்கள் தேடல் மிக மிக எளிதுதான். ஆனால், தமிழ்நாட்டின் பத்து பணக்காரர்களைப் பட்டியல் இடுவது பெரும்பாடே ஆகும். இருந்தாலும் ஏதோ ஒரு அடிப்படையில் கிடைத்த தரவுகளை அடுக்க இந்த ஒன்பது பெரும்பணக்காரர்கள் பட்டியல் உருவாகியிருக்கிறது.

02,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முதலாவதாக- தமிழ்நாட்டுத் தொழிலதிபரும் கல்வியாளருமான சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார், இந்தியாவின் முன்னணி ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார். மிக எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் 28.7 பில்லியன் டாலர். ஹெச்சில் தலைவர் பதவியில் இருந்து சிவ நாடார் விலகிய நிலையில், அவரது மகள் ரோசினி நாடார் தலைவராக உள்ளார்.

இரண்டாவதாக- மலேசிய தமிழ்நாட்டு வணிகரான ஆனந்த கிருஷ்ணன் உசாகா தேகாஸ்-ன் நிர்வாக தலைவராவார். இவரின் சொத்து மதிப்பு 7.5 பில்லியன் டாலராகும்.

மூன்றாவதாக- இந்திய மரபுரிமையரான அமெரிக்க வணிகரான ராம், கூகுள் போர்டு குழுமத்தில் உள்ள உறுப்பினராவார். கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் முதலீட்டாளராவார். இவர் முன்னாள் அமேசானின் ஊழியராவார். இவர் அமெரிக்க குடிமகன் ஆனாலும், படித்தது எல்லாம் சென்னை லயோலா கல்லூரியில் தான். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலாராகும்.

நான்காவதாக- சன் மீடியா குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், 270 கோடி டாலர் சொத்து மதிப்பினை கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த பேரறிமுக வணிகரான இவர், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஐந்தாவதாக- இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான கிரிஷ் கோபால கிருஷ்ணனின் சொத்து மதிப்பு சுமார் 390 கோடி டாலராகும். இவர் பிறந்தது கேரளா என்றாலும், படித்தது வளர்ந்தது சென்னையில் தான்.

ஆறாவதாக- தமிழ்நாட்டின் சிறந்த தொழிலபதிர்களில் ஒருவரான பார்கவ் சாய் பிரகாஷ் சேலத்தினை சேர்ந்தவர். பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட இவரும், தமிழ்நாட்டு பெரும்பணக்காரர்களில் ஒருவர்.

ஏழாவதாக- சென்னையில் பிறந்த வெள்ளையன் முருகப்பா குழுமத்தை சேர்ந்தவராவார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களாகும். முருகப்பா குழுமம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும்.

எட்டாவதாக- ஈரோட்டினை சேர்ந்த மிகப்பெரிய உற்பத்தியாரான ராஜரத்னம், தமிழகத்தின் மிகப்பெரிய வணிகராவார்.

ஒன்பதாவதாக- இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சிறீவாசன், தமிழ்நாட்டுத் தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளவர். பைஞ்சுதை (சிமெண்ட்) உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,250.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.