Show all

தொடர்கின்றனர் வேல்முருகன், சீமான்! ஆ.ராசா பேசியது- பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்களே.

பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத் தென்படுகிறது வரிசையில் இச்செய்தி, சீமான் வேல்முருகன் தொடர்தல் குறித்தது

02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆ.ராசாவின், சமூகநீதி மீட்புவகை பேச்சு குறித்து, நாகரிகமற்ற முறையில் அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து காவி கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல, இந்தக் கும்பல்களின் அவதூறு கருத்துப்பரப்புதல் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஆ ராசாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் மதம்தான் மண்ணின் மக்களின் பிறப்பைக் கொச்சைப்படுத்தி உரைக்கிறதே ஒழிய, அண்ணன் ஆ.ராசா அவர்கள் எவரது பிறப்பு குறித்தும் இழிவாகப் பேசவில்லை. இதனையே அவருக்கு முன்பாக தமிழின முன்னோர்களும், ஐயா பெரியார் போன்ற சமூகச்சீர்திருத்தவாதிகளும் பலமுறைப் பேசியிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆ.ராசா அரசியல் இயக்கத்தாலும், கொள்கை நிலைப்பாட்டாலும் மாறுபட்டாலும், அவர் இம்மண்ணின் மகன்; தமிழகத்தின் மிக முதன்மையான கருத்தாளுமை! மதவாதிகள் அவரை நோக்கி இழிசொற்களை வீசுவதை அனுமதிக்கவோ, அவரை விட்டுக்கொடுக்கவோ முடியாது. என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆ.ராசாவுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன். ஆகவே, ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான அண்ணன் ஆ.ராசா அவர்களின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து, என்றைக்கும் துணைநிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினருமான திரு.ஆ.ராசா. அவர்கள் 'மனு ஸ்மிருதியில்' குறிப்பிடப்பட்டுள்ளதைத்தான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினாரே தவிர ஹிந்து மக்களையோ, ஹிந்து மதத்தையோ புண்படுத்தும் வகையில் பேசவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து காவி சங்கிக் கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியதாகும் திரு.ஆ.ராசா. அவர்கள் குறித்த சங்கி கும்பல்களின் அவதூறு கருத்துப்பரப்புதல் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,376.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.