Show all

சரக்குமற்றும் சேவைவரியைக் கந்துவட்டியோடு ஒப்பிட்டு விளக்கிய விக்கிரமராஜா

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் அறிமுக கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி கூறியதாவது:

வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு இடர் பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சரக்குமற்றும் சேவை வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பல்வேறு இடர்பாடுகளை அரசு சரிசெய்ய வேண்டும். கந்துவட்டி போல் தான் சரக்குமற்றும் சேவை வரி விதிப்பு உள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வரி விதிப்பு அதிகப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விலைவாசி உயரும். எனவே முறையான ஆய்விற்கு பின்னரே வரி விதிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.