Show all

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது! தமிழக முதல்வர் காட்டம்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து, பொறியியல்படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டுகள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு, 160 நாட்கள் விடுமுறை. எட்டாம் வகுப்பு வரை, தேர்ச்சி, தேர்ச்சியின்மை கிடையாது. இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு போராடினால், யார் ஏற்றுக் கொள்வர்? 

கடந்த ஆண்டு மட்டும், 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், சம்பள உயர்வு வழங்கி உள்ளோம். இவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவது, எந்த வகையில் நியாயம்?

30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர், 60 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். என்னுடைய, நேர்முக உதவியாளர் 65 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார்; தற்போது, 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இன்னும் என்ன கொடுக்கிறது? எல்லா பணத்தையும் இவர்களுக்கு கொடுத்தால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்; என்று காட்டமாகத் தெரிவித்தார்.

(!)இத்தனைக்கும் அரசு பள்ளிகளில், சில வகுப்புகளில் மூன்று மாணவர்கள் இரண்டு மாணவர்கள் கூட இருக்கிறார்கள்.

(!)பத்தாயிரம் கூட சம்பளம் வாங்காத தனியார் பள்ளி ஆசிரியர்கள், வகுப்புகளுக்கு நாற்பது, ஐம்பது மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். 

(!)அரசு ஊழியர்கள், எவ்வளவோ சம்பளம் கேட்கட்டும் ; போராடட்டும் ; அதெல்லாம் தப்பில்லை. முதலில் அரசு பணியில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்திருந்தால், அரசுப் பணியில் இருந்து அவர்களை நீக்க வேண்டும்

இப்படியெல்லாம் இணைத்தில் பலர் தமிழக முதல்வருக்கு ஆதரவாகவும். அரசு ஊழியர்களுக்கு எதிராகம் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.