Show all

ரூ.50000000000 அபராதம் வசூலித்த வங்கிகள்! அரசு ஆய்வு செய்து, பொது மக்களை அவர்கள் அபராதத்திலிருந்து காப்பற்ற வேண்டும்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வங்கிகளில், குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ.4,988 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா பாராளுமன்றத்தில் பதிகை செய்த அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்திய மாநில வங்கி ரூ.2,434 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

மற்றும், எச்டிஎப்சி: 590 கோடி

ஆக்சிஸ்: 530 கோடி

ஐசிஐசிஐ: 317 கோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி: 211 கோடி என அபராதம் வசூலித்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சேவை வழங்குவதில் எந்த வங்கிகளையும் உயர்ச்சி தாழ்ச்சி சொல்ல முடியாது. அவ்வாறு இருக்கும் போது, அதிக அபராதம் விதிக்க வேண்டிய தேவை இருக்கிற வங்கிகளை, அரசு ஆய்வு செய்து, பொது மக்களை அவர்கள் அபராதத்திலிருந்து காப்பற்ற வேண்டும்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,870.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.