Show all

நடிக்க வருபவர்களுக்கெல்லாம் தமிழக முதல்வராவதற்கான தகுதி வேண்டுமா என்ன

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமானவர் ஜூலி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போகப்;;; போகப் பொய் மட்டுமே பேசுவார் ஜூலி என்ற அவப்பெயரை சம்பாதித்தார்.

ஜூலிக்கு திரைப் படங்களில் நடிக்க வேண்டும்; என்று ஆசை. திரைப் படத்தில் நடிப்பதற்கு உண்மை பேசுவது தகுதி என்றெல்லாம் இல்லையே! தாராளமாக நடிக்கலாம்.

போராட்டத்தில் இருந்து வந்ததால், திரைத் துறை மூலம் நாளை தமிழக முதல்வர் ஆவதற்கான மக்கள் செல்வாக்கிற்கு கொஞ்சம் உண்மையானவராக நடிக்கவாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

ஆதனால் ஊடகங்களால், உண்மையாளியாக நடிக்கத் தெரியாத ஜூலியை செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

இப்போதைக்கு அவரைத் தேடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்துள்ளது. கலா மாஸ்டர், கோகுல் நடுவர்களாக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஜூலி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஜூலிக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் கூட ஊடகங்களால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. உண்மையா? அவ்வளவு தொகை தேவையா என்று செய்தி போட்டுக் கொண்டிருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,599

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.