Show all

94ம் அகவையில் காலமானார் தமிழறிஞர் மா.நன்னன்

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் ஊரில் 14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5026 ல் (30.07.1924) பிறந்தார் மா.நன்னன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார்.

வௌ;ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர். எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் புதிய முறையை ஏற்படுத்திய பேராசிரியர் நன்னன், தொலைக்காட்சிகளில் தமிழ் தொடர்பான ஏராளமான நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார்.

தமிழ் கட்டுரை, பாடநூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு. வி.க.விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

முதுமை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த மா.நன்னன் இன்று காலமானார். அவருக்கு அகவை 94. அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள், தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.

தமிழறிஞர் மா.நன்னன் அவர்களுக்கு மௌவல் செய்திகள் தம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.