Show all

தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது

மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.

இது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,

விவசாய தொழில்முனைவோர்கள் அந்தந்த துறைஅதிகாரிகளின் அங்கீகாரம் பெற்று ஆஸ்பி நிறுவனத்திற்கு அனுப்பினர். பீகார், காஷ்மீர், கேரளாவைச் சேர்ந்த தேனீக்கள் வளர்க்கும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

15 ஆயிரம் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளித்தது, 21 வகை தேன் உற்பத்தி, 11 வகை மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரித்தது, பிளாஸ்டிக் தேன்பெட்டி கண்டுபிடித்தது ஆகிய காரணங்களுக்காக எனக்கு விருது வழங்கினர்.

தேனீக்கள் பூக்களில் இருந்து மட்டும் தேன் எடுப்பதில்லை. பழங்களை உண்டு தேனாக மாற்றுகிறது என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறேன். சப்போட்டா, மாம்பழத்தை கூழாக்கி காய்ச்சி பிளாஸ்டிக் தேன்பெட்டியில் ஊற்றுகிறேன். அதை உண்டு தேனாக மாற்றுகிறது. வேளாண் பல்கலையில் எனது ஆராய்ச்சியை தெரிவித்துள்ளேன். விருப்பப்படுபவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பதற்கு இலவச பயிற்சி அளிக்கிறேன் என்றார். இவரது அலைபேசி 98655 55047


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.