Show all

மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடும் விஜயதரணிக்கு கட்சியினர் எதிர்ப்பு

மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விளவங்கோட்டில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி மீண்டும் போட்டியிடுகிறார். விஜயதரணி போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர். விஜயதரணி 5 ஆண்டுகளாக தொகுதிக்கு வரவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டிஉள்ளனர்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான விஜயதரணி சட்டமன்ற உறுப்பினர் ஏற்கனவே தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்திருக்கிறார். அப்போது, அவருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து விஜயதரணி  நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார்.

விஜயதரணி டெல்லி சென்று, தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் பேசினார். இதேபோல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லி சென்று சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தான், கடந்த மார்ச் மாதம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக விஜயதரணி  நியமிக்கப்பட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.