Show all

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க குடியரசுதலைவர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்குவதில் தீவிரமாக உள்ள டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், டெலாவரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்திய கால்சென்டர்களில் பணியாற்றுகிறவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு எப்படி பதில் அளித்து பேசுவார்கள் என்பதை பேசிக்காட்டி கிண்டல் செய்து, புதிய சர்ச்சையில் சிக்கினார்.

அதே நேரத்தில் இந்தியாவை உயர்த்தியும் அவர் கருத்து கூறினார்.

இதுபற்றி அவர்கூறும்போது,

“இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. பிற தலைவர்களுடன் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. ஆனால் நமது தலைவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்களே என்பதில்தான் வருத்தமாக உள்ளது” என கூறினார்.

 

மேலும், “சீனாவுடன் எனக்கு கோபம் இல்லை. ஜப்பானுடனும் கோபம் இல்லை. வியட்நாமுடனும் கோபம் இல்லை. இந்தியாவுடனும் கோபம் கிடையாது” என குறிப்பிட்டார்.

 

அதே நேரத்தில் “சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியாவுக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கும் கொள்கைகளை ஏற்க முடியாது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை ஒரு குழந்தையின் கையில் இருந்து சாக்லேட்டை பறிப்பது போல பறித்து செல்வதை அனுமதிக்க முடியாது” எனவும் அவர் ஆவேசமாக கூறினார்.

 

“கோணலான லாரியை எதிர்த்து குடியரசுதலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.