Show all

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகக் கூடாது என ஒபாமா எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அமெரிக்க-பிரிட்டன் வர்த்தத்தை எட்டுவதற்கு 10ஆண்டுகள் ஆகும் என பிரிட்டனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி  4நாள் பயணமாக பிரிட்டனுக்கு வந்தார். அவர் தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் பி.பி.சி.க்கு பேட்டி அளித்தார். அந்தச் செய்தி ஒலிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

     ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினால் அந்த நாடு தனது மதிப்பினை உலக அளவில் இழக்கும். அமெரிக்கா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பிரிட்டனுக்கு 10ஆண்டுகள் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை போல பிரிட்டன்  விரைவாக அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்தின்  நீண்டகால  வர்த்தக கூட்டாளியான பிரிட்டனுடன் எங்களது வர்த்தக பேச்சுவார்த்தையை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

     பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகத் தொடர்ந்து இருக்க வேண்டுமா அதிலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கேள்விக்கு, பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பதில் அளிக்க வேண்டும். இதற்கான அதிகாரபூர்வ கருத்தறியும் வாக்கெடுப்பு வரும் ஜூன் 23-ல் நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையே, வெளியேறிவிடலாம் என்று 38% பேரும், தொடரலாம் என்று 37% பேரும் ‘யுகவ்’ எனும் ஆய்வு நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.