Show all

பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள்! வெள்ளானூர் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆவடி வெள்ளானூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேற்று பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கிழமைக்கு ஒரு நாள், விளையாட்டு சிறப்புச் சீருடையை பெரும்பாலான பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன. இதில் மாணவ மாணவியர்களின் மேல் சட்டை அரைக்கை பின்னலாடையாக இருக்கும். ஒட்டுமொத்தப் பள்ளியும் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என நான்கு வண்ணச் சட்டைகளால் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஆண்டின் இறுதியில் நடைபெறும் விளையாட்டு விழா வண்ணமயமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

ஆவடி வெள்ளானூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேற்று இந்த வகை சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளானூர் கிராமத்தில், தொல்தமிழர் நல நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

தற்போது, இங்கு பயிலும் மாணவர்களுக்கு, நான்கு வண்ணங்களில் விளையாட்டுச் சிறப்புச் சீருடை, காலணி மற்றும் உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.

இதனால், இப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ - மாணவியர் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,344.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.