Show all

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த அடி

‘நேஷனல் ஹெரால்டு’  வழக்கில் விசாரணை நீதிமன்றம் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘நேஷனல் ஹெரால்டு’  வழக்கில் சோனியா, ராகுல் மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோர் மீது, சொத்துக்களை அபகரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 26ந் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோமதி மனோச்சா, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்கான அடிப்படை ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். எனவே சோனியா, ராகுல் உள்ளிட்ட 4 பேரும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜூலை மாதம் 30-ந்தேதி 6 பேரும் டெல்லி உயர;நீதிமன்றத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து டிசம்பர் மாதம் 15-ம் தேதி இறுதிவாதம் வரையில் நேரில் ஆஜராகுவதற்கு நீதிமன்ற தடை விதிக்கப்பட்டது.

‘நேஷனல் ஹெரால்டு’  வழக்கில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்நிலையில் ‘நேஷனல் ஹெரால்டு’  வழக்கில் விசாரணை நீதிமன்றம் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பலத்த அடியாக அமைந்து உள்ளது.

மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுனில் கவுர், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற 5 குற்றவாளிகள் சுமன் துபே, மோதி லால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சாம் பித்ரோடா மற்றும் யங் இந்தியா லிமிடெட் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

டெல்லியில் கடந்த 1938-ம் ஆண்டு ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிறுவினார். இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்ததாக, பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி, டெல்லி பாட்டியாலா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது புகார் மனுவில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடிக்கு கடன் இருந்ததாகவும், அந்த கடனை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து, கட்சி விதிகளை மீறி சோனியா, ராகுல் ஆகியோர் அடைத்ததாகவும் கூறியிருந்தார். அதற்கு பிரதிபலனாகத்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து அவர்கள் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை அபகரித்தனர் என்று கூறினார்.

மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் ஒரு பகுதி பாஸ்போர்ட்டு நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் குத்தகை நிபந்தனைகளை காந்தி குடும்பத்தினர் மீறியதுடன், மொத்த சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டிருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.