Show all

இன்று செயலலிதா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

      செயலலிதா நடித்த படங்கள் 115. இதில், எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்.  ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா என்ற ‘அரசிளங்குமரி படப் பாடல்தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார் செயலலிதா.  

      அந்தப் பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எழுத்துகளை நாட்டுடைமையாக்கினார்.   

      செயலலிதா அவர்களை எம்ஜியார் அவர்களை விடச் சிறந்த முதல்வர் என்று கொண்டாட முடியாது.

      கலைஞரை விட சிறந்த முதல்வரா என்றால், கலைஞர் கடைசி பத்தாண்டு ஆட்சியில் வெறுமனே போட்டி அரசியலிலும், காங்கிரஸைக் கட்டிக் காப்பதிலும் வீணடித்தார். அந்தக் கலைஞரை விட செயலலிதா சிறந்த முதல்வர். தொடக்க கால கலைஞர் ஆட்சியோடு எம்ஜிஆர் ஆட்சியைக் கூட இணை வைப்பது சிரமம்.

      திமுக செயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இழுத்து விடாமல் இருந்திருந்தால் இன்னும் தமிழகத்திற்கு நிறையச் செய்திருப்பார். ஏன் கட்சத்தீவைக் கூட மீட்டிருப்பார். குறிப்பாக இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பார்.

      இன்று செயலலிதா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.