Show all

செயலலிதாவின் நினைவுகளைக் கொண்டாட அதிமுகவினர்களுக்கு உரிமை இருக்க முடியுமா

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

நடுவண் அரசில்- ஆட்சியில் இருப்பவர்கள் மீதும், இருந்து விட்டு இறங்குகிறவர்கள் மீதும் எந்த வழக்குகளும் பாய்வதில்லை. அப்படி பாய்வதற்கு, (ஆங்கிலேயர் சட்ட அடிப்படையிலான) இந்திய சட்ட அமைப்பில் நடுவண் அரசுக்கு மேலான அதிகார அமைப்பும் ஏதும் இல்லை.

இந்த இரண்டு அடிப்படைகளின் காரணமாக செயலலிதா அவர்கள் நடுவண் அரசில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைக்கக் கருதியே நாற்பதும் நமதே என்று தமிழ் மக்களிடம் கோரிக்;கை வைத்து வெற்றியும் பெற்றார்.

இது தமிழ் மக்களுக்குப் புரிந்தது. அதிமுக கட்சிக்காரர்களுக்குப் புரியவேயில்லை.

செயலலிதா அவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு- திமுகவின் தமிழ்நண்டுகள் வேலை என்பதை தமிழ்மக்களைப் போல் அடித்துச் சொல்லத் தெரியவில்லை. செயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு குற்றம் சுமத்தப் பட்ட பிறகுதானே தமிழ் மக்கள் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வழங்கி செயலலிதாவிற்கு கை கொடுத்தார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவுணர்வுக்குள்ளானார்கள்.

வழக்கையே மறுப்பதற்கு திராணியும் அறிவும் இல்லாமல்-

சசிகலாதான் செயலலிதாவைக் கெடுத்தார் என்று கற்பித்து, லாஜிக் இல்லாமல் செயலலிதாவை விடுவிக்கும் முயற்சியில் பாஜகவோடு இணைந்து சசிகலாவை ஒட்டு மொத்த குடும்பமாக ஒழிக்கும் முயற்சியில் அணி திரண்டிருக்கிறார்கள்.

செயலலிதாவை உயிரோடு வைத்துக் கொண்டு தமிழ்மக்கள் வழக்கை மறுத்தார்கள். அதிமுகவினரோ செயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்க செயலலிதாவையே பலி கொடுக்கிறார்கள்.

அறிவும் அனுபவமும் அற்ற பன்னீரும் எடப்பாடியும் நான்கு ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஓர் இறப்பு பயன் படுத்திக் கொள்;ளப் பட்டிருக்கிறது.

தமிழ்மக்களின் நாடித் துடிப்பு அறியமாட்டாத ஊடகங்களும் இந்த முயற்சிக்குத் துணை போகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.