Show all

மாணவர்கள் உடன் ஆன கலந்துரையாடலில் கமல் உதிர்த்த முத்தான மூன்று கருத்துக்கள்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை கிருட்டிணா கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், மூன்று முத்தான கருத்துக்களை முன்வைத்தார்.

1. இளம் அகவையில் அரசியலுக்கு வரவேண்டும்.

2. இந்தியாவை செதுக்கும் திறமை இளைஞர்களிடமே இருக்கிறது.

3. தமிழர்கள் வேலைக்காரர்கள் தளத்தில் இருந்து முதலாளிகளாக உருவாக வேண்டும். என்பன அவை.

உங்கள் (மாணவர்கள்) அகவையில் அரசியலுக்கு நான் வந்திருக்க வேண்டும். வராததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதனால் நீங்களாவது (மாணவர்கள்) இந்த அகவையில் அரசியலுக்கு வாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள். அரசியலை பாடமாக எடுத்தவர்கள் என்ன பேசுவார்கள். நாளை உங்களது வாழ்வை வெகுவாக பாதிக்கக்கூடியது அரசியல். எது நல்ல அரசியல் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

வாழ்க்கையின் சரியான கட்டத்தில் இருக்கிறீர்கள். இந்தியாவை செதுக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் களத்திற்கு வாருங்கள்.

இது வேலைக்காரர்களின் உலகமாக அல்லாமல், முதலாளிகளின் உலகமாகப் போகிறது. அரசு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தனியார் வேலைவாய்ப்புகளும், குறுந்தொழில்களும் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களால்தான் அரசியலை மாற்றமுடியும். இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என்றார் கமல்ஹாசன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.