Show all

தனியார் நிறுவனம் ஒன்று ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வாங்கும் முயற்சி! அரசின், நீராதாரத்திற்கான சதுப்பு நிலத்தை ஈடாக வைத்து

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் சதுப்பு நிலங்கள், சென்னையின் நீராதாரமாக விளங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தனியார் பெரும்புள்ளிகள் சென்னையின் சதுப்பு நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு சதுப்பு நிலங்களின் பரப்பை குறைத்துக் கொண்டே வருகின்றனர். 

அந்த வகையாக சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை அடமானம் வைத்து தனியார் நிறுவனம் ஒன்று  ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வாங்கும் முயற்சி வெளிக் கொணரப் பட்டிருக்கிறது. 

இது குறித்து கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்கினி சிறகுகள் அறக்கட்டளையின் செயலாளர் செந்தில் குமார் என்பவர், இந்தக் கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்கக்கோரி, உயர்அறங்மன்றத்தில் வழக்கு தெடர்ந்துள்ளார்.

மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஐ.ஜி- 3  இன்போ என்ற தனியார் நிறுவனம்,  அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில், ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதாகவும், அந்த அடமான பத்திரம் பதிவுக்காக சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.