Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: பாகிஸ்தானிற்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாயில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக  சோயிப் மாலிக் 43(67) ரன்களும், பாபர் அசாம் 47(62) ரன்களும் குவித்தனர். இந்திய அணியில் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 1விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 52(39) ரன்களும், ஷிகார் தவான் 46(54) ரன்களும் குவித்து ஓரளவே சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 31(46) ரன்களும், 31(37) ரன்களும் குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஷ்ரப், ஷதப் கான் ஆகியோர் தலா1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.