Show all

'தடை'யின் காற்றைக்கிழிக்கும் வேகம்! மெரினா- தமிழன் வீரம், அறிவாற்றல், ஒற்றுமையை வெளிக்காட்ட அருமையான தளம்

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போரட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டது  தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி அறங்கூற்றுமன்றத்தை அணுகாத தமிழக அரசு உழவர்களின் போராட்டத்திற்கு இரண்டு மணி நேரத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளது. இந்த அவசரத்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும், டெல்லிக்கும் சென்று காட்டியிருக்க வேண்டும். இதற்கு நடுவண் அரசின் அழுத்தமே காரணமாக இருக்க முடியும். இந்த வழக்கில் இடைக்கால தடையை நீக்க கோரி வருகிற புதனன்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதற்காகத்தான் லட்சக்கணக்கான உழவர்களாகிய நாங்கள் சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இப்படியெல்லாம் செயல்படுகிற அரசு மக்கள் நலனிலும், உழவர்களின் நலனிலும் எப்படி அக்கறை காட்ட முடியும் என்பது தெரியவில்லை. என்று கூறினார்.

எடப்பாடி-பன்னீர் சொல்கிற இடங்களில் போராட்டம் நடத்தினால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவோ, போராட்டத்தை விரிவு படுத்தவோ, உலகளவில் போராட்டத்தை விளம்பரப் படுத்தவோ முடியவே முடியாது. ஆனால் சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போராட்டத்தை நடத்தினால் பொது மக்களக்கு சிறிதும் இடையூறு ஏற்படுத்தாமல் அறவழிப் போராட்டமாகவே தொடர்ந்து நடத்த முடியும், போரட்டத்தை எவ்வளவு நாட்கள் வேண்டுமானலும் தொடர்ந்து நடத்த முடியும், போராட்டத்தை எவ்வளவு வேண்டுமானலும் விரிவு படுத்த முடியும், உலகின் இரண்டாவது அழகான நீளமான கடற்கரையில் போராட்டம் என்றால் விளம்பரம் பிய்த்துக் கொண்டு போகும். 'தீர்வு தராமல்' அல்லது 'அரசு பயங்கர வாதத்தை கையிலெடுக்காமல்' போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே முடியாது. 

அதனால் தான் எடப்பாடி- பன்னீர் அரசு சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போராட்டத்திற்கு தடை விதிக்க இவ்வளவு கடுமையான வேகம் காட்டுகிறது. 

'தமிழனுக்கு வீரமும் இருக்கிறது! அறிவாற்றலும் இருக்கிறது! ஒற்றுமையுணர்வும் இருக்கிறது! அதை வெளிப்படுத்த மிகப் பெரிய தளம் சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரை என்பதை தமிழன் கண்டு கொண்டான்' 

என்பதை நடுவண் அரசும், ஊடகங்களும், எடப்பாடி-பன்னீர் அரசும் தெரிந்து கொண்டு விட்டன. அதனாலேயே எடப்பாடி-பன்னீர் அரசுக்கு காற்றை கிழிக்கும் இத்தனை வேகம்! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,772.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.