Show all

6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை மீண்டும் வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 29-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரா்கள்  டி காக் மற்றும் மெக்கல்லம் ஆகியோா் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக தொடக்கத்தை தந்தனர். டி காக் 29(27 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை அடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 68 (44பந்துகள்) ரன்கள் குவித்து காலத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175  ரன்களை சோ்த்தது. கொல்கத்தா அணி சார்பாக பந்து வீசிய ஆந்த்ரே ரசூல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். 6.3-வது ஓவரில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்த போது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது. மீண்டு ஆட்டம் தொடங்கியதும், சிறிது நேரத்தில் சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த உத்தப்பா 36 ரன்கள் எடுத்தும் நிதிஷ் ராணா 15 ரன்கள் எடுத்தும் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 23 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 19.1-வது ஓவர்களில் 176 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 62 ரன்கள் எடுத்து கடைசி வரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பாக முருகன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 SRH 8 6 2 +0.514 12
2 CSK 7 5 2 +0.538 10
3 KXIP 7 5 2 +0.228 10
4 KKR 8 4 4 +0.110 8
5 RR 7 3 4 -0.751 6
6 MI 7 2 5 +0.033 4
7 RCB 7 2 5 -0.447 4
8 DD 7 2 5 -0.487 4

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.