Show all

நடுவண் அரசின் அடுத்த மக்கள் விரோத நடவடிக்கை

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முட்டை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நடுவண் அரசு ரத்து செய்ததால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் இருந்து நாள்தோறும் சுமார் 3.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அவற்றில் 40விழுக்காடு முட்டைகள் கேரள மாநிலத்துக்கும், 10விழுக்காடு சத்துணவு திட்டத்துக்கும் மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில் 50 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது. நடுவண் அரசு முட்டை ஏற்றுமதிக்கு 2விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கி வந்தது. இதனால் ஆண்டுக்கு 1,200 கொள்கலன் வண்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்நிலையில், நடுவண் அரசு கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5116ம் (2014) ஆண்டு 2விழுக்காடு ஊக்கத்தொகையை 1வழுக்காடாக குறைத்தது. இதனால் ஏற்றுமதி 50விழுக்காடு குறைந்து ஆண்டுக்கு 600 கொள்கலன் வண்டிகள் மட்டுமே ஏற்றமதி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 15,புரட்hசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (1.10.17) தற்போது வழங்கி வந்த ஒரு விழுக்காடு ஊக்க தொகையையும் மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால் ஏற்றுமதி மேலும் 50 விழுக்காடு குறைந்து நாள் ஒன்றுக்கு ஒரு கொள்கலன் வண்டி மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கொள்கலன் வண்டி அனுப்பியது, தற்போது 1 கொள்கலன் வண்டியாக குறைந்துள்ளது.

1 கொள்கலன் வண்டியில் 4,72,000 முட்டைகள் அனுப்ப சுமார் 60 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 240 பணியாளர்கள் செய்த வேலை தற்போது 60 பணியாளர்கள் மட்டுமே செய்வதால் கூலி தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்தக் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்றவும், தொழிலாளர்களுக்கு நிரந்த வேலை கிடைக்கவும் மீண்டும் 2விழுக்காடு ஊக்கத்தொகையை நடுவண் அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்று கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,603

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.