Show all

திருவண்ணாமலை கார்த்திகை விளக்கேற்று விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவண்ணாமலை, சிவன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விளக்கேற்றுத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

(தமிழர்களின் கார்த்திகை மாத கார்த்திகை நாள்மீன் குளிர்காலத்து இயற்கை காரண விளக்கேற்;றும் திருவிழாவைப் பார்த்து-

ஆரியர்கள் ஐப்பசி மாத அமாவாசைத் திதியில் தீபாவளி; விழாவை திருமாலுக்கும், நிலமகளுக்கும் பிறந்த நரகாசுரனுக்கு வெளிச்சம் பிடிக்காது என்று கதைக் காரணங்களோடு உருவாக்கிக் கொண்டனர்.)

இதை முன்னிட்டு, அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருவவடிவ சிவனாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பின், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை உடனான முருகன், உண்ணாமுலையம்மன் உடனான அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

விழா நடக்கும், பத்து நாட்களும் பகலில் வழிபாடு இரவு பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா என்று விளக்கேற்று விழா சிறப்பாகக் கொண்டாடப் பெறும்.

வரும், 16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (02.12.2017) அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பரணி நாள்மீன் விளக்கு, மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், பெருவிளக்கு ஏற்றப்பட உள்ளன. திருவண்ணாமலை கோயில், தஞ்சை பெரிய கோயிலைப் போல தனித்த சிறப்புடையதன்று.

இக்கோயில் சோழர்களால் கட்டப் பட்ட போதும் கூட,

ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் கட்டுமாணப் பணிகளையும் மிகுதியாக கொண்டுள்ளன.

விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோயிலின் கருங்கல் கட்டுமாணப் பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோயிலிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகத் தொன்மையானது. இக்கோபுரம தமிழ்தொடர்ஆண்டு-4165ல் (1063) வீர ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியபோது, அண்ணாமலையார் கோவிலிலுள்ள வல்லாள மகாராஜா கோபுரம் மூன்றாம் வல்லாள மகாராஜாவால் தமிழ்தொடர்ஆண்டு-4393லிருந்து 4444வரை (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபமும் வல்லாள மன்னரின் கட்டுமாணம் என்பர்.

ஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச நிலையை அடைந்தது.

கிருஷ்ண தேவராயர் தமிழ்தொடர்ஆண்டு-4611லிருந்து 4631வரை (1509 - 1529) தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் தமிழ்தொடர்ஆண்டு-4618ல் (1516) கட்டத் தொடங்கினார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களிலேயே மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும்.

சிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவையாகும்.

திருவண்ணாமலைக் கோயில், பலசார்புகளைக் கடந்து வந்த காரணத்தால் கட்டுமான வரலாற்றை யாரும் அறிந்தவராக இல்லை. பொய்ப் புராண ஆரியர் புளுகுக் குப்பைகளை வண்டி வண்டியாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,615

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.