Show all

அனைத்துலக மகளிர் நாளில் அவ்வையாருக்கு மரியாதை

அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், திருவரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   

     அனைத்துலக மகளிர் நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

     அவ்வையாரின் அமுத மொழிகள் இன்றைக்கும் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிறது. இதனை முன்னிட்டே ஆண்டுதோறும் மகளிர் நாளன்று அவ்வையாருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

     அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, நிலோபர் கபில், திருவரங்கம் வளர்மதி ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா,

     மகளிருக்காக பல திட்டங்களை கொடுத்தவர் செயலலிதா. தாலிக்கு தங்கம், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்டம், பேறுகால உதவிகள் என பல திட்டங்களை செயலலிதா அறிவித்தவர் என்றும் கூறினார். மகளிர் நலனுக்காக 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் சரோஜா கேட்டுக்கொண்டார்.

     முன்னதாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் செயலலிதா என்றார். கச்சதீவை மீட்க வழக்கு தொடுத்தவர் என்றும் கூறினார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.