Show all

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் அவசியம்: நடுவண் பாஜக அரசு

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று நடுவண் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது-

     இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்புவோர், தற்போது ஆதார் எண் இல்லையென்றாலும், வரும் மே மாதம் 31-ஆம் தேதிக்குள் அந்த எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.

     இதுதவிர, ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்த ஒப்புகைச் சீட்டின் நகலை இணைத்தும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற விண்ணப்பங்களில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றையும் பயனாளிகள் இணைக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் பெறுவதற்கு பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று நடுவண் பாஜக அரசு உத்தரவிட்டது. தற்போது, ஏழைப் பெண்கள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

     திராவிடநாடு கோரிக்கை, பின்னர் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்கி வந்த திமுக வருங்கால முதல்வராக ஸ்டாலினை அரியணை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

     செயலலிதாவை இழந்த அதிமுகவை பாஜக நடுவண் அரசு பொம்;;;மலாட்டப் பவைகளாக ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

     நடுவண் பாஜக அரசோ-

மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து நடுவண் அரசிடம் அதிகாரங்களைக் குவிக்கும் பல்வேறு உபாயங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையானவைகள் தாம் இந்த

சரக்கு மற்றும் சேவை வரி,

ஆதார் சாதாரண மனிதனின் அதிகாரம்,

ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை,

வங்கி கணக்கில் எரிவாயு மானியம்

தற்போது இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற ஆதார் அவசியம் என்பனவெல்லாம்.

இந்தியாவில்- பாரத தேச ஹிந்து இராஜ்ஜியத்தை அமைத்திட மோடி அரசு காங்கிரசை நம்புகிறது; இரண்டு கட்சிகளும்  ஒன்றையொன்று காட்டிக் கொடுத்துக் கொள்ளாமல் கொள்ளை அடித்தாலும்,

இந்தியாவில்- பாரத தேச ஹிந்து இராஜ்ஜியத்தை அமைக்கும் கொள்கையில்,

மாநிலக்கட்சிகள் எதையும் நம்பவில்லை; அவைகள் மதச் சார்பற்ற நாடாக இந்தியாவை ஆக்கிவிடும் என்று அஞ்சுகிறது.

இதை எந்த மாநிலக் கட்சிகளும் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை.

திராவிட நாடு, மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்கிய திமுகவிற்கே புரியாத போது வேறு மாநிலக் கட்சிகளுக்கு எங்கே புரியப் போகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.