Show all

மூன்று ஆயுள் தண்டனை விதித்து 2012-ம் ஆண்டு அளித்த தீர்ப்பு ரத்து

வறுமை தாங்காமல் 3 குழந்தைகளைக் கொன்ற பெண்ணிற்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக 3 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார் என்பது வழக்கு. எதிர்பாராத விதமாக அவர் மட்டும் பிழைத்துக் கொண்டார். வழக்கை விசாரித்த சேலம் விரைவு நீதிமன்றம் ஜெயலட்சுமிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

 

இதை எதிர்த்து ஜெயலட்சுமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. வறுமையின் பிடியில் சிக்கியதால் பாதிக்கப்பட்ட அவர் இவ்வாறு செய்திருப்பது இந்திய தண்டனை சட்டம் 84-வது பிரிவின் கீழ் குற்றம் ஆகாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு துயர முடிவுக்கு அவர் தள்ளப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதனை ஏற்றுக் கொண்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வறுமையால் 7 குழந்தைகளைக் கொன்ற நல்லதங்காளுக்கு விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் சிலையே இருப்பதை சுட்டிக்காட்டியது. எனவே மனதளவில் பாதிக்கப்பட்டு 3 குழந்தைகளைக் கொன்ற ஜெயலட்சுமியின் நிலையும் இவ்வாறு தான் இருந்திருக்கும் என்று கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.